ஒரே பயிர் தாவரத்தை பயன்படுத்தி பல விவசாய முறையினை மேற்கொள்ள முடியும் என்று American Society of Agronomy ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அந்த பயிர் மண்ணிற்கு தேவையான நைட்ரஜன் ஆற்றலினை அதிக அளவு அளிக்கிறது. குறிப்பாக Faba beans தாவரம் மண்ணிற்கு இயற்கையான உரத்தினை அளிக்கிறது. இந்த தாவரத்தின் உலர்ந்த விதை சிறந்த பருப்பாக நமக்கு கிடைக்கிறது. இதில் அதிக அளவு நைட்ரஜன் இருப்பதால் இதன் வளர்ச்சிக்கு அதிக அளவு உரம் தேவையே இல்லை.
நியூட்டன் லுப்வெயி மற்றும் அவருடைய குழு பருப்பு தொடர்பான ஆய்வினை கனடா, அல்பெர்ட்டா நாடுகளில் நடத்தினார்கள். ஆய்வின் முடிவில் அல்பெர்ட்டா நாட்டில் பருப்பு வகைகள் அதிக அளவு பயிரிடுவதற்கு ஏற்ற சிறந்த மண் வகைகள் மற்றும் காலநிலைகள், சரியான மழை பொழிவு ஆகியவை காணப்படுகிறது என்று ஆயவாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கனடா நாட்டில் பயிரிடப்படும் faba beans இரண்டு வழிகளில் மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். இந்த பருப்பு தாவரத்தை அறுவடை செய்த பிறகு தாவரத்தை அப்படியே மண்ணில் விட்டுவிட்டால் அதிக அளவு நைட்ரஜனை இது கொடுக்கிறது. இதனால் மண்ணில் கார்பன் அளவு அதிகரிக்கிறது. இதனால் இந்த மண்ணிற்கு செயற்கை உரம் தேவைபடுவதில்லை. அடுத்து வேறு பயிரினை பயிரிட இந்த beans தாவரத்தின் பகுதிகள் உரமாக பயன்படுகிறது. ஆர்கானிக் அளவு இந்த பருப்பு தாவரத்தில் அதிகம்.
பொதுவாகவே பச்சையம் அதிக அளவு உள்ள தாவரத்தில் நைட்ரஜன ஆற்றல் அதிக அளவு இருக்கும். ஆனால் பருப்பு பயிர்களில் மிக அதிக நைட்ரஜன் ஆற்றல் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது இது மண்ணினை மிக அதிக ஆற்றல் கொண்டதாக மாற்றுகிறது. இதனால் விவசாயிகளுக்கு உரம் வாங்கும் செலவு இருக்காது. மேலும் இது சுழற்சி முறையில் அடுத்த பயிர் நன்றாக வளருவதற்கு உதவுகிறது என்று நியூட்டன் லுப்வெயி கூறினார். மிக சிறந்த ஆர்கானிக் கார்பனை Faba beans தாவரம் மண்ணிற்கு வழங்குவதால் மண் அதிக ஆற்றல் மற்றும் தரம் வாய்ந்ததாக தானகவே மாறிவிடுகிறது.
http://www.sciencedaily.com/releases/2016/01/160106125159.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli