உலகில் உள்ள மக்களுக்கு உணவாக பெரும்பாலும் இருப்பது அரிசி. மொத்த உணவில் அரிசியில் உள்ள கலோரி 5-ல் ஒரு பங்கு ஆகும், என்று டாக்டர் பயஸ் கூறினார். உலக மக்கள் தொகை 2050-ல் 9 பில்லியனை தாண்டும் என்று ஆராய்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப உணவினை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம்.
இதற்காகவே தற்போது ஆராய்சியாளர்கள் EA105 chlororaphis வகை பூஞ்சை நுண்ணுயிரி கொண்ட நெல் பயிர் விதையினை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது பயிரின் வேர்களை சுற்றியுள்ள மண்ணை, தீமை தரும் பாக்டீரியாக்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட இந்த பூஞ்சை வேர்களுக்கு abscisic அமிலத்தை அளிப்பதால் வேர்களுக்கு ஏற்ற ஆற்றல் கிடைத்து விடுகிறது.
இந்த பூஞ்சைகள் பயிருக்கு தேவையான நோய் எதிர்ப்பு சத்தினை கொடுத்துவிடுகிறது. இந்த பூஞ்சைகள் பார்லி, கோதுமை போன்ற பயிர்களுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது.
http://www.sciencedaily.com/releases/2015/12/151222113505.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli