Skip to content

தேனீக்கள் அனைத்து மலர்களிலும் மகரந்த சேர்க்கையை மேற்கொள்வதில்லை

University of Queensland ஆராய்ச்சியாளர்கள் மகரந்தசேர்க்கையை பற்றிய ஆய்வு செய்ததில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. பெரும்பாலும் தேனீக்கள்தான் மகரந்தசேர்க்கையில் அதிக அளவு ஈடுபடுகிறது என்பது நமக்கு தெரியும்.

ஆனால் தற்போது Syrplid fly ஈ இனம் அதிக அளவு மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகிறது என்பதினை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிகமான மகரந்த சேர்க்கை மாம்பழ செடிகள், சீதாப்பழம், kiwi பழமரம், காபி மரம் போன்றவற்றில்தான் நடக்கிறது. டாக்டர் ரேடர் அவர்களின் குழுமேற்கொண்ட ஆய்வின்படி தற்போது தேனீக்களை விட Syrplid fly ஈ அதிக அளவு மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகிறது என்று அவர் கூறினார்.

தேனீக்கள் மொத்த மகரந்த சேர்க்கையில் சுமார் 25-50% வரை ஈடுபடுகிறது. இவர் 1739 பயிர் சம்பந்தப்பட்ட படிப்புகளை 5 கண்டங்களில் ஆராய்ச்சி செய்துள்ளார். இவருடைய ஆராய்ச்சியின் முடிவில் தேனீக்கள் அனைத்து மலர்களிலும் மகரந்த  சேர்க்கையினை மேற்கொள்வதில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது. மேலும் அனைத்து மலர்களிலும் மகரந்தசேர்க்கையை மேற்கொள்வது Syrplid fly-தான் என்பது இவருடைய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

http://www.sciencedaily.com/releases/2015/11/151130163229.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj