உலகில் அதிகமாக கரும்பு உற்பத்தியாகும் இடங்களில் முதன்மையாக இருக்கும் நாடு தென் ஆப்பிரிக்கா ஆகும். ஆனால் அங்கேயே தற்போது கரும்பு சாகுபடி மிக கடுமையாக பாதித்துள்ளது. அதுவும் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுதான் மிக மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.
இது வரை இதனை போல வறட்சி எப்போதும் ஏற்பட்டதே இல்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து பார்த்ததில் எல்நினோ பாதிப்பால்தான் இது ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. இதனால் அங்குள்ள சர்க்கரை ஆலைகள் பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளது.
இந்த வறட்சி பெரும்பாலும் southern Africa பகுதிகளில்தான் அதிகம் ஏற்பட்டுள்ளது. எல்நினோ பாதிப்பால் பசிபிக் பெருங்கடல் பகுதிகள் அதிகமாக வெப்பமாகி வருகிறது என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் தற்போது எல்நினோவினால்தான் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
http://www.bbc.com/news/business-35070664
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli