மண் இல்லாமல் செயற்கை ஒளியினைக் கொண்டு தாவரங்களை விஞ்ஞானிகள் வளர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த விவசாய முறையை ஹைட்ரோபோனிக்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க இந்த செயற்கை தாவர வளர்ச்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த தாவரங்களுக்கு தண்ணீர் மூலமே வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ற ஆற்றல் அளிக்கப்படுகிறது. இந்த முறையினை முந்தைய ரோமன் பேரரசர் டைபெரியஸ் மேற்கொண்டுள்ளார். இவர் செயற்கை முறையில் வெள்ளரி செடியினை வளர்த்து உள்ளார். தற்போது அதை அடிப்படையாக கொண்டே, மத்திய ஜப்பான் பகுதிகளில் கீரையினை மிக சிறந்த முறையில் வளர்த்து வருகின்றனர். இதற்கு சுத்தமான அறை ஒன்று இருந்தால் மட்டும் போதும். செயற்கை முறையிலான தாவர வளர்ச்சியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது அவையாவன:
- இம்முறையில் தாவரம் வளர மண் தேவையில்லை.
- மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவினை உற்பத்தி செய்வது எளிமை.
- நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய முடியும்.
- தண்ணீரை (மறுசுழற்சி) திரும்பவும் பயன்படுத்தும் முறை.
- இந்த தாவர பண்ணையினை எங்கு வேண்டுமானாலும் நிறுவ முடியும்.
- பூச்சிகளின் தாக்குதல் இருக்கவே இருக்காது.
- போக்குவரத்து செலவுகளை குறைக்கிறது.
- சூரிய ஒளியும் தேவையில்லை.
இம்முறையிலான விவசாயத்தால் அதிக செலவுகள் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் காய்கறிகளை இதன்மூலம் உற்பத்தி செய்தால் அதிக இலாபம் ஈட்ட முடியும். செயற்கை வெப்பமூட்டிகளை கொண்டு தாவரம் சிறந்த முறையில் வளர்ச்சி பெற்று வருகிறது. இம்முறையில் வளரும் கீரைகள் மற்றும் காய்கறிகளில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது.
இம்முறையில் உற்பத்தி செய்யப்படும் கீரை, காய்கறிகளை விற்பனை செய்ய வெளியில் கொண்டு செல்ல வேண்டியதில்லை. வளரும் இடமே அழகான விற்பனை கடையாக காட்சியளிக்கிறது. இம்முறையினை பல்பொருள் அங்காடி, ஹோட்டல், மருத்துவமனைகளிலும் மேற்கொள்ள முடியும். இம்முறையால் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை இளம் தலைமுறையினரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
இந்த முறையிலான விவசாயத்திற்கு LED பல்புகளை அதிக அளவு உபயோகப்படுத்துகின்றனர். இதேப்போல் அமெரிக்காவிலும் மாடிப்பகுதிகளில் மிக சிறந்த முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் உள்ள நகரங்களிலும் இந்த விவசாயத்தை மேற்கொள்ள போவதாக அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. இம்முறையினை பின்பற்றினால் பல நாடுகள், உணவு பொருட்களை மிக எளிதாக உற்பத்தி செய்ய முடியும்.
http://www.bbc.com/news/business-35098045
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli