ஆஸ்திரேலியாவில் அதிசயமான 2 மீட்டர் உயரமுள்ள “corpse Flower” பூத்துள்ளது. இந்த பூ தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் தாவரவியல் பூங்காவில் பூத்துள்ளது. இந்த பூ 10 வருடங்களாக இந்த தாவரவியல் பூங்காவில்தான் பூத்து வருகிறது. இந்த பூ சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு பூக்க தொடங்கியது. இறுதியாக திங்களன்று இந்த பூ மலர்ந்து அழகான மிகப்பெரிய குடைப்போன்று காட்சியளிக்கிறது.
இந்த பூ மீன் வாசனையை கொண்டதாக உள்ளது, என்று தோட்டக்கலை பொறுப்பாளர் மாட் கூட்டர் கூறினார். இந்த பூ மிகவும் வலுவானதாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு பூத்த பூ மிகப்பெரியதாக உள்ளது என்று கூட்டர் கூறினார். நான் இதை பார்த்ததும் இது மலர் இல்லை மரம் என்று நினைத்தேன் என்றும் அவர் கூறினார்.
இந்த பூவினங்கள் இந்தோனேஷியாவில் உள்ள சுமித்ரா தீவில் அதிகம் உள்ளது. இது கோடைகாலத்தில் குளிரையும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த 2மீ உயரமான பூ இரண்டு நாட்களுக்கு பிறகு தானே அழிந்து விடும். இதன் துர்நாற்றம் தேனீக்கள் வண்டுகளுக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது. இந்த பூ மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது. இந்த பூ பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது.
http://www.bbc.com/news/35192049
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli