பசுமை மாறாக்காடுகள் அதிக அளவில் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் காணப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அங்குள்ள மரங்கள் காய்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் 2050-ம் ஆண்டிற்குள் கால்பங்கு காடுகள் அழிந்துவிடும் என்று University of Dealware ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவர்களின் கருத்துப்படி வரும் 2100 ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பசுமை மாறாக்காடுகள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி அமெரிக்காவில் உள்ள 11 தேசிய காடுகள் 20 மில்லியன் ஏக்கர் அளவில் தற்போது உள்ளது. ஆனால் தற்போதைய வெப்பமயமாதலால் இந்த காடுகள் அழியும் அபாயத்தில் உள்ளது.
இந்த காடுகள் அரிசோனா மற்றும் நியூ மெக்ஸிகோ பகுதிகளில் பரந்து காணப்படுகிறது. 5 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 50% மழை இந்த பகுதியில் குறைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள Pinon pines மரங்கள் 80% அழிந்து விட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விலங்கினங்களும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. இதேப்போல் ரஷ்யா மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவலறிக்கை கூறுகிறது.
http://www.sciencedaily.com/releases/2015/12/151221194122.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli