Site icon Vivasayam | விவசாயம்

உலக கார்பன் அதிகரிப்பிற்கு காரணம்

University of Leicester ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தற்போது இந்தோனேசியாவில் எற்பட்டுள்ள அதிகப்படியான கார்பன் வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் வெப்பமண்டல காடுகளில் ஏற்பட்ட தீதான் என்று விஞ்ஞானிகள் கூறினர். இந்த பாதிப்பால் வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வு அதிகரிக்கிறது. பெரும்பாலும் காடுகளில் ஏற்படும் தீ மண்ணில் கார்பன் உமிழ்வை அதிகரிக்கிறது.

அதுமட்டுமல்லாது காட்டு பகுதிகளில் பாயும் ஆறுகளிலும் அதிக அளவு மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. வெப்பமண்டல காடுகளில் peatland பகுதிகளில் எரிந்த மரக்கட்டைகளின் துகள் அப்படியே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருப்பதால் கார்பன் உமிழ்வு அதிக அளவு ஏற்படுகிறது. மொத்தமாக இந்தோனேசியாவில் 65%  கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது வரை இங்கு 82-92  giga tonnes கார்பன் புவி மேற்பரப்பில் குளங்களாக தேங்கி இருக்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையால் அதிக அளவு கார்பன் வளிமணடலத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தப்போவது உறுதி. கார்பன் அளவு அதிகரிப்பால் தாவரங்களுக்கும்  பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு உலக வெப்பமயமாதலிற்கு காரணமாக அமைகிறது என்று University of Leicester’s Department of Geography பேராசிரியர் சூசன் கூறினார்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151217082445.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version