Site icon Vivasayam | விவசாயம்

மாசுக்களை நீக்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நுட்பம்

கார்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள வேதி உயிரியல் துறையை சார்ந்த ஒரு ஆராய்ச்சி குழு சமீபத்தில் ஒரு சிறந்த நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அதே தொழில்நுட்பம், ஒரு Febreze காற்று தூய்மைபடுத்தியை உருவாக்கியுள்ளது. இது கண்ணுக்கு தெரியாத காற்றில் உள்ள மாசுக்கள் மற்றும் தேவையற்ற நாற்றங்களை நீக்குகிறது.

கார்பன் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் மற்ற சுத்திகரிப்பு முறைகளை விட  200 முறை மேன்மையானது, பரப்புக் கவர்ச்சி மூலம்  மாசுப்பொருட்களை பிரித்தெடுக்க சைக்லோடெஸ்ட்ரின் என்ற ஒரு நுண்ணிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இது சந்தைகளில் தற்போது கிடைக்கும். மொத்த நீர் வளத்தில் மனிதன் பயன்படுத்துவது 1% தான். மாசுக்களின் காரணமாக தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

தண்ணீர் தான் வாழ்க்கைக்கு ஆதரவளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பல்கலைகழகங்கள் தற்போது வேறுபட்ட இரசாயனங்கள் மற்றும் உயிரி இரசாயன செயல்முறைகள் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரை உயர் திறனுடன் தூய்மைசெய்து வருகின்றன.

இதன் அடிப்படையில் கார்னெல் பல்கலைக்கழகம், எம்ஐடி மற்றும் பென் ஸ்டேட் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைகழகங்கள் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். எம்ஐடி ஆராய்ச்சி குழு தண்ணீரில் உள்ள தீய பாக்டீரியாவை நீக்க ஒரு பிளாஸ்டிக் குழாயில் sapwood பட்டையின் ஒரு சிறிய துண்டை பயன்படுத்தினர், இது செலவு குறைந்த செயல்முறையாகும். மறுபுறம் பென் ஸ்டேட் பல்கலைக்கழக குழுவினர் தண்ணீரை தூய்மைபடுத்த பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தினர்.

கார்னெல் பல்கலைக்கழக குழு அறிமுகப்படுத்திய தண்ணீரை சுத்தம் செய்யும் முறை தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த குழுவின் தலைவர் Dichtel, இதற்காக இன்னும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மாசுபடுத்திகளை நீக்குவதற்காக நீண்ட காலத்திற்கு இம்முறை பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

http://www.crazyengineers.com/threads/new-water-purification-technique-uses-polymer-to-filter-organic-micropollutants.86022/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version