Site icon Vivasayam | விவசாயம்

தாவரத்தின் நானோ செல் புற்றுநோயை குணப்படுத்துகிறது

Case Western Reserve University ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புற்றுநோய் ஆராய்ச்சியில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தாவரத்தின் செல், வைரஸ்கள் புற்றுநோயை குணப்படுத்துகிறது என்பதாகும். குறிப்பாக இந்த தாவர செல்கள் பெருங்குடல், மார்பக கட்டிகள், நுரையீரல் கட்டிகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை மேற்கொண்ட வழிமுறையினை அடிப்படையாக கொண்டு புற்றுநோய் கட்டிக்கு தகுந்த மருந்தினை கண்டறிந்துள்ளனர்.

தாவரத்தின் செல் துகள்கள் மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தியது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி பெரும்பாலும் தட்டைப்பயிறு தாவரம் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் ஆற்றல் அதிக அளவில் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இந்த தட்டைபயிறு தானாகவே நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் ஆற்றல் பெற்றதாக திகழ்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இதனை பற்றி சோதனை செய்ய B16F10 நுரையீரல் பாதித்த எலிக்கு நானோ துகள் (தாவர செல்) கொண்டு தொடர்ந்து மருந்து அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த எலிகளை சோதித்து பார்த்ததில் அந்த எலிகளுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாவர நானோ துகள் எலிக்கு தகுந்த எதிர்ப்பு சக்தியினை அளித்து மற்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

http://www.sciencedaily.com/releases/2015/12/151222113154.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version