அரசு இன்று விவசாயிகள் பயிர் காப்பீடு மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய பொருட்களின் விலை தொடர்பான தகவல்களை பெற உதவும் வகையில் இரண்டு மொபைல் போன் குறுஞ்செயலிகளை வெளியிட்டுள்ளது.
”Agri Market” மொபைல் குறுஞ்செயலி மற்றும் ”Crop Insurance” மொபைல் குறுஞ்செயலி என்ற இரண்டு விவசாயிகளுக்கான குறுஞ்செயலிகளையும் வேளாண் அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உருவாக்கியுள்ளனர். இந்த குறுஞ்செயலிகளை கூகுள் ஸ்டோர் அல்லது mkisan போர்டல் ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசு பயிர் காப்பீட்டை விரிவாக்குவதற்கு விவசாயிகளுக்கு பெருமளவு செலவழிக்கிறது. பயிர் காப்பீடு தொடர்பான திட்டங்களை விவசாயிகள் தகுந்த நேரத்தில் பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த ”Crop Insurance” மொபைல் குறுஞ்செயலி மூலம் பயிர் காப்பீடு பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார்.
AgriMarket மொபைல் குறுஞ்செயலி மூலம் பயிர் மற்றும் அனைத்து விவசாயம் சம்பந்தமான பொருட்களின் விலைகளையும் தெரிந்துகொள்ளலாம். தற்போது, இந்த மொபைல் குறுஞ்செயலிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli