தற்போது சிவப்பு பட்டியலில் ஆப்பிரிக்காவின் சிங்கங்களும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச விலங்குகள் அமைப்பின் தகவலறிக்கைப்படி இந்தியா மற்றும் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சிறுத்தை புலிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏனென்றால் அதனுடைய எண்ணிக்கை தற்போது வரை மிக கனிசமான அளவு குறைந்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள Melanochaita சிறுத்தை புலி இனமும் குறைந்து வருவதாக தகவலறிக்கை கூறுகிறது. சிங்கம் அனைவரும் மிகவும் விரும்பும் ஒரு விலங்காகும். ஆனால் தற்போது இந்த இனம் அழிந்து வருவது என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று மூன் மற்றும் வன விலங்கு நலவாழ்வு துறையின் இயக்குனர் டான்ஹசி கூறினார்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சிங்கத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பொதுமக்களும் கண்டிப்பாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போது Ceil இனங்களை நிறைய பேர் வேட்டையாடி வருகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டே விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க பல்வேறு சட்டங்கள் பிறப்பிக்கப்படுள்ளது. ஆனால் இதனை யாரும் பின்பற்றுவதே இல்லை. தற்போது வரை Panthara சிறுத்தை புலிகள் 14000 மற்றும் Melanochaita இன சிறுத்தை புலிகள் 18000 இனங்கள் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா காடுகளில் காணப்படுகிறது, அமெரிக்காவில் கூட இந்த இனங்கள் காணப்படுகிறது. வருங்காலத்தில் இதனை அதிகரிக்க வேண்டுமெனில் பல்வேறு வனவிலங்கு பாதுகாப்பு மேலாண்மையினை மேற்கொண்டே ஆக வேண்டும் என்று டான்ஹசி கூறினார். சர்வதேச இயற்கை வாழ்விட அமைப்பின் கணக்கெடுப்பின் படி 1993-லிருந்து 2014 வரை சுமார் 43% சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
http://www.popsci.com/african-lions-are-now-considered-an-endangered-species-in-united-states
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli