உலக வர்த்தக அமைப்பு நாடுகள் வேளாண்மை ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் மானியத்தை நிறுத்திவிட்டு வளர்ந்து வரும் நாடுகளில் மானியம் தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. WTO, 162 நாடுகளின் கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகளை கேட்டது.
இந்த WTO அமைப்பு கடந்த 1995-ம் ஆண்டிலிருந்து தனது பணியினை செவ்வனே செய்து வருகிறது. கென்ய வர்த்தக உச்சி மாநாட்டில் மற்ற வர்த்தக தடைகள் பற்றி எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. விவசாய ஏற்றுமதி மானியங்களை நீக்குவதால் ஏழை நாடுகள் அதிக அளவில் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி போட்டி பற்றிய முடிவு திருப்தி அளிப்பதாக உலக வணிக அமைப்பின் தலைவர் ராபர்டோ அஸேவெதோ கூறினார். இந்த மாநாட்டில் விவசாயம், ஜவுளி, மற்றும் ஆடை வர்த்தகத்திற்கு குறைந்த காப்புரிமைகளை பெறப்போவதாக WTO கூறியது. இந்த அமைப்பில் மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் லைப்பிரியா நாடுகளும் சேர்ந்துள்ளது. இதனை WTO ஏற்றுக்கொண்டது.
http://www.bbc.com/news/business-35145377
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli