University of Exeter ஆராய்ச்சியாளர்கள் கடலில் உள்ள உயிரினங்களை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நமக்கு மிக சிறந்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கடல் வெப்பநிலை அதிகரிப்பால், கடலில் உள்ள தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நடவடிக்கை அதிகரித்துள்ளது என்பதாகும்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, எப்படி குளத்தில் உள்ள தண்ணீரையும் செயற்கையாக வெப்பமடைய செய்து தாவரங்களுக்கு ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்துவது எப்படி என்பது பற்றி 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியினை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நடைமுறைபடுத்த போவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 5 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி வெப்பநிலை தண்ணீரில் அதிகரித்தால் 70% ஒளிச்சேர்க்கை கடல் தாவரங்களில் அதிகரிப்பதால் வளிமண்டல கரியமில வாயு அளவு பெருமளவு குறையும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வெப்பநிலை தண்ணீரில் அதிகரித்தால் பல்வேறு நுண்ணுயிரிகள் வளர்ச்சி பெறுகிறது. தற்போது உலக வெப்பமயமாதலால் கடலில் உள்ள பல்லுயிர் இனங்கள் ஒளிச்சேர்க்கை அளவு அதிகரிப்பது, ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிச்சேர்க்கையின் பயனாக கடல் உயிரினங்களுக்கு தகுந்த உணவு கிடைக்கும். இந்த வெப்பநிலை மாற்றத்தினால் பூமியில் உள்ள உயிரினங்கள் அதிக நாட்கள் வாழ வழிவகுக்கும் என்று உயிரியல் மற்றும் இரசாயன அறிவியல் UMUL பள்ளி பேராசிரியர் மார்க் டிம்பர் கூறினர்.
http://www.sciencedaily.com/releases/2015/12/151217151533.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli