Site icon Vivasayam | விவசாயம்

ஆரோக்கிய உணவுமுறைகள் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

Carnegie Mellon University ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட காய்கறிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ஏனென்றால் பழங்கள், காய்கறிகள் அதிக அளவு பயன்படுத்துவதாலேயே பசுமையில்ல வாயுவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். அதுமட்டுமல்லாது பால் மற்றும் கடல் உணவுகள் அதிக தீங்கினை சுற்றுச் சூழலிற்கு ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி செய்து  நிருபித்துள்ளனர். கீரை பயன்படுத்துவதால் மிக அதிக அளவில் பசுமை இல்லவாயு பாதிப்பு  ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இறைச்சி சாப்பிடுவதை காட்டிலும் கீரையில் அதிக கலோரிகள் இருப்பதால் பசுமை இல்லவாயு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இது மூன்று மடங்கு அதிகமாக பசுமை இல்ல வாயுவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். கோழி இறைச்சியினை காட்டிலும் மோசமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தண்ணீர் பயன்பாடு மட்டுமே பசுமை இல்ல வாயுவின் மாசுபாட்டினை குறைக்கிறது. சுமார் 9 சதவீத உணவு ஆற்றல் பயன்பாடு, தண்ணீர் பயன்பாட்டினால் மட்டுமே பயன் அளிக்கிறது.

நாம் ஆரோக்கியமான உணவு வகைகள் என்று நினைக்கும் பால் மற்றும் காய்கறிகளில் 6% பசுமை இல்லவாயு பாதிப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பாதிப்புகளை பற்றி Environmental Engineering மாணவரான மைக்கல் டாம் என்ற Phd மாணவர் பல்வேறு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். இதேப்போல சுற்றுச்சூழல் பேராசிரியர் பால் பிச் பேக்கும் காய்கறிகளினால் அதிக அளவு பசுமைஇல்ல வாயுவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்து கூறியுள்ளார். குறிப்பாக முட்டைகோஸில் அதிக அளவு பசுமை இல்ல வாயு பாதிப்பு இருக்கிறது என்பதை கூறியுள்ளார்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151214130727.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version