உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன் விவசாயம் செய்யும் ரோபோக்களை ஃபார்ம் போட் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். எதிர்கால விவசாயத்திற்காக, FarmBot நிறுவனம் முதன்முறையாக இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உணவுபொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
துல்லியமான விவசாயத்தால் தொழில்துறையின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. ஆனால் அதன் செயல்திறனை மேம்படுத்தும் சாத்தியம் நிறைய இருக்கிறது. FarmBot விவசாய ரோபோ தயாரிப்பிற்கு முன், துல்லியமான விவசாய உபகரணங்கள் மிகப் பெரிய கனரக வடிவில் மட்டுமே கிடைத்தது. ஒவ்வொரு துல்லிய விவசாய டிராக்டர்களுக்கும் அமெரிக்க டாலர் மதிப்பில் $1 மில்லியன் செலவு ஆகும் என்று FarmBot-ஐ உருவாக்கிய ரோரி அரோன்சன் 2011-ல் கூறினார்.
அந்த ரோபோ பணி செயல்பாடு மென்பொருளையே நம்பியுள்ளது. பயனர்களுக்கு FarmBot நிறுவனம், web app மூலம் பயனளிக்கிறது. அந்த Farmbot நிறுவனத்தின் ரோபோ செடிகளுக்கு தேவையான நீர், உரம், மற்றும் பிற வளங்கள் வழங்கி ஆரோக்கியமாகவும் வெற்றிகரமாகவும் செடிகளை வளர்க்கிறது.
இதற்கு எந்த வித மென்மையான சென்சார் தொழில்நுட்பம் தேவையில்லை என்பதால், FarmBot-ன் விவசாய ரோபோ தொழில்துறை சந்தையில் துல்லிய விவசாய உபகரணங்களை விட மலிவாக இருப்பதாக கூறுகிறார்கள். நீங்கள் விரும்பும் அனைத்து தோட்டங்களிலும் பணி செய்ய FarmBot ஏற்றதாக இருக்கும்.
விரைவில் இந்த ரோபோ உங்கள் சொந்த விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். FarmBot ரோபோவை எதிர்காலத்தில் கொல்லைப்புற விவசாயத்திற்கு ஏற்றவாறும் மாற்ற முடியும் என்று கூறுகிறார்கள்.
http://news.yahoo.com/farmbot-diy-agriculture-robot-promises-001518504.html
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli