ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோயினை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது Biomed Central Limited ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பினை நம் கைவிரல் கொண்டே கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகின்றனர்.
நெல் பயிரினை நம் விரல் கொண்டு மெதுவாக தடவி பார்க்கும்போது அந்த பயிர் மிகவும் மென்மையாக இருந்தால் நோய் பாதிப்பு இல்லை என்று நாம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தாவரங்கள் பெரும்பாலும் அடிக்கடி மழை, காற்று மற்றும் இயந்திர அழுத்தம் ஆகியவற்றினால் பாதிப்படைகிறது. பெரும்பாலும் கொந்தளிப்பான கடலோரப் பகுதிகளில் வளரும் மரங்கள் தடிமனான இலைகளை கொண்டு வளரும்.
நாம் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தும் இயந்திரங்களினால் கூட தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனென்றால் இயந்திரம் மண்ணினை உழும்போது மண்ணில் உள்ள சத்துகளை அழித்துவிடுகிறது. இதனால் தாவரங்கள் நன்றாக வளர முடிவதில்லை, தாவரங்களில் எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் அதிகரித்தால் இதன் இலைகள் மற்றும் வளர்ச்சி மிக விரைவாக நடைபெறும். பெரும்பாலும் நோய் எதிர்ப்பு பங்களிப்பு தாவரத்தின் இலைகளிலே அதிகம் காணப்படுகிறது. பயிர்களில் சாம்பல் அச்சு காணப்பட்டால் பூஞ்சை தாக்கி உள்ளதாக நாம் அறிந்து கொள்ளலாம், இதனை மிக எளிதாக நம் கைவிரல்களை கொண்டே நாம் கண்டுபிடித்துவிடலாம்.
http://www.sciencedaily.com/releases/2013/09/130912203053.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli