Site icon Vivasayam | விவசாயம்

புதிய மகரந்த சேர்க்கை தேனீ

தற்போது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அந்நாட்டின் தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு கன உலோக அணுகு முறையினை மேற்கொள்கிறது என்பதாகும். ஆஸ்திரேலிய தேனீக்கள் ஒரு நொடியில் 350 முறை பூக்களின் மீது கன உலோக அணுகுமுறையில் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்துகிறது. இந்த வகை தேனீக்கள் நீல நிறத்தை கொண்டிருக்கிறது. பெரும்பாலும் தக்காளி செடிகளில் உள்ள பூவில் இருந்து மகரந்த சேர்க்கையை அதிக அளவில் இந்த நீல நிற தேனீக்கள் மேற்கொள்கின்றது. இதேப்போல அமெரிக்க தேனீ வகைகளும் தக்காளி மலரினை அதிகமான மரந்த சேர்க்கைக்கு எடுத்து கொள்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது சாதரணமான தேனீக்கள், மகரந்த சேர்க்கை மேற்கொள்வதை காட்டிலும் மிக விரைவாக செயல்பட்டு தன் பணியினை முடிக்கிறது. இந்த தேனீக்களில் அதிர்வெண் அளவு மிக அதிகமாக உள்ளதால் மகரந்த சேர்க்கை பணி மிக விரைவாக நடைபெறுகிறது. அதுவும் ”சூப்பர் பாஸ்ட்” வேகத்தில் மகரந்த சேர்க்கை பணி நடைபெறுகிறது என்று ஹாவாட் பல்கலைக்கழக தேனீ சிறப்பு டாக்டர் கத்யா Hogendoom கூறினார்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151214092726.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

Exit mobile version