தற்போது ஒவ்வொரு நகரத்திலும் தொழிற்துறை தளங்கள் தரிசாகவிடப்பட்டுள்ளது. இந்த தரிசு பகுதிகளை திரும்பவும் மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றுவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மண் மிகுந்த வளமுடன் இருந்தால் மட்டுமே தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளினால் மண் அசுத்தமாகிறது. இதனை சரிசெய்ய ஒரே வழி Biosolids முறை அவசியம். தற்போது சிகாகோவிற்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள எஃகு ஆலை பகுதியில் 87 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இதனை விளைநிலமாக மாற்றபோவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது ஒரு சவால்தான் என்று ஆராய்ச்சியாளர் நிக்பாஸ்தா கூறினார். ஏனென்றால் அங்குள்ள நிலத்தில் 60% வெற்று பாறைகள் இதனை மறுசுழற்சி செய்வது கடினம். நல்ல மண்ணில் பாக்டீரியா, பூஞ்சை, பூச்சிகள், புழுக்கள் சரியான விகிதத்தில் இருக்கும். அதனால் நிலத்திற்கு இரசாயன உரம் அத்தியாவசிய தேவையாக இருக்காது. இயற்கையான மண் ஆற்றல்தான் தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
தற்போது ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அருகில் உள்ள கழிவு நீர் நிலத்தினை சுத்திகரித்து மண்ணினை தரமானதாக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் Biosolids முறையினை கையாள்வதாக கூறினர். இதன் உதவிக்கொண்டு மண்ணில் நன்மை தரும் கலவையினை உருவாக்க MURD-ன் ஒத்துழைப்பும் அவர்களுக்கு கிடைத்துள்ளது. முதலில் அவர்கள் கடின மரங்களிலிருந்து கரிமவள மூலபொருள்களில் உரம் தயாரித்து மண்ணினை தூய்மையாக்க திட்டமிட்டுள்ளனர். சிகாகோ நகரம் ஏற்கனவே Biosolids முறையினை பயன்படுத்தி வருகின்றது. இதனால் அங்கு மண் தரமானதாக உள்ளது என்று பாஸ்தா கூறினார்.
http://www.sciencedaily.com/releases/2015/12/151209144328.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli