Site icon Vivasayam | விவசாயம்

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் கற்கால யூரேசியா நாடோடிகள் சிறு விதை தானியங்களை சரியான பருவத்தில் கலப்பு விவசாயம் மூலம் பயிரிட்டுள்ளனர்.

பெரும்பாலும் தானியங்கள் தற்போது மேற்கு பகுதியில் உள்ளதற்கு காரணம் பறவை இனங்கள் மற்றும் பண்டைய கால்நடை மேய்பவர்கள் அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். இந்த நாடோடிகள் எடுத்துவரும் தானியங்களை அவர்கள் தங்கும் பகுதியில் விதைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பல்பயிர் சாகுபடி வளர்ச்சி பெற்றது.  இந்த முறையில்தான் கோதுமை, பார்லி, உலக முழுவதும் பரவி உள்ளது. பெரும்பாலும் சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்துதான் தானியம் உலக அளவில் பரவி உள்ளது. பெரும்பாலும் திணைதான் வறட்சி தாங்கக்கூடிய பயிர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இது குறுகிய காலத்தில் வளரும் தானியமாகும். இது 45 நாட்களிலேயே நல்ல விளைச்சலினை கொடுக்கும்.

நாடோடி மக்கள் கி.மு 2500 மற்றும் கி.மு1600 ஆண்டுகளுக்கு இடையில் கால்நடை மேய்சலின் மூலம் திணை வளர உதவினர். அதன்பிறகு அவர்கள் பல்பயிர் திட்டத்தினை நிலத்தில் மேற்கொண்டனர். இதனால் திணை வளர்ச்சி மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப  அதிகரித்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் உலக உணவு தட்டுப்பாட்டினை போக்க ஒரே வழி பல்பயிர் திட்டம்தான். திணைப் பயிர்கள்தான் தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ற உணவு பொருளாக இருக்கும். இதனை பண்டைய நாடோடிகள் போன்று பல்பயிர் முறையினை மேற்கொண்டால் நிச்சயம் விவசாயம் பெருகும்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151214084754.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version