University of California ஆராய்ச்சியார்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சிப்படி ஆர்கனோபாஸ்பேட் பூச்சிகொல்லி மருந்தினை விவசாயத்திற்கு பயன்படுத்தியதில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாயின் நுரையீரல் செயல்பாடு அதிகம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கலிபோர்னியாவில் உள்ள விவசாய குடும்பத்திலிருந்து 279 குழந்தைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இதேப்போன்று கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பெரும்பாலும், குழந்தை கருவிலிருக்கும்போது தாய் புகைப்பிடிப்பதால் மற்றும் காற்று மாசுபாட்டினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளனர். பெரும்பாலும் அதிகமாக பூச்சிகொல்லி மருந்துகளை விவசாயத்திற்கு பயன்படுத்தியதாலே குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுவாச பிரச்சனையே நுரையீரல் பாதிப்பிற்கு முக்கிய காரணம். பெரும்பாலும் தாவரத்தில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்கு வேலையாட்கள் உடைகளை அணிந்துசென்று பூச்சிகளை அழித்துவிட்டு திரும்பவும் அந்த உடையினை கலட்டாமல் வீட்டிற்குள் நுழைவதால் அதில் உள்ள இரசாயணம் வீட்டில் உள்ளவர்களையும் பாதித்துவிடுகிறது. அதுமட்டுமல்லாது பூச்சிகொல்லி அடிக்கப்பட்ட காய், பழங்களை கழுவாமல் சாப்பிடுவதால் சுவாச கோளாறு அதிகம் ஏற்படுகிறது. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் சில வருடங்களுக்கு பிறகு மரணம் கூட ஏற்படும், தற்போது உலக அளவில் மரணம் நுரையீரல் பாதிப்பாலே ஏற்படுகிறது என்று நுரையீரல் நிபுணர் டாக்டர் ஜான் பல்ம்ஸ் கூறினார். இதனை சரி செய்ய சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டியது அவசியம்.
http://www.sciencedaily.com/releases/2015/12/151203111208.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli