காலநிலை மாற்றத்தால் உணவு பொருட்களின் உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தேசிய வளிமண்டல ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வெப்பமண்டல பகுதியில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிகிறது.
2015-ம் ஆண்டின் காலநிலை மாநாட்டு அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி உலகில் தற்போது அச்சுறுத்தும் மிகப்பெரிய ஒன்று உணவு உற்பத்தி சீர்குலைவு. இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். தற்போதுள்ள சூழலில் உணவு உற்பத்தி செய்வது மிகப்பெரிய சவால் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். NCAR விஞ்ஞானியான கிளாடியா தேபல்டி தற்போது உலகில் மிகப்பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறுகின்றார்.
இதனை தவிர்க்க பாதுகாப்பான மற்றும் சுத்தமான உணவு வகைகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் வரும் 2100-ம் ஆண்டுகளில் பல்வேறு விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பாக தெற்காசியா போன்ற வெப்பமண்டல பகுதிகளில் பயிர்கள் மற்றும் கால்நடைகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் இயற்கை சேதம் கண்டிப்பாக அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி சுமார் 805 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். வரும் 2080-ம் ஆண்டிற்குள் இது இன்னும் 175 மில்லியன் அதிகரிக்கும். இந்த பாதிப்பினை தடுக்க ஒரே வழி நாம் அதிக அளவு அறிவியல் இயற்கை முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
http://www.sciencedaily.com/releases/2015/12/151202142319.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli