Skip to content

சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு உதவும்

Genome Analysis Ventre மற்றும் IBERS இணைந்து தீவனப் பயிரை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டதில், சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த சிவப்பு தீவனப்புல் இயற்கையாகவே நைட்ரஜன் ஆற்றலை பெற்றுள்ளதால் இது மண் வளத்தை மேம்படுத்தி பயிர் சுழற்சி முறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த சிவப்பு தீவனத்தில் உள்ள நைட்ரஜன் ஆற்றல் மண்ணிற்கு நைட்ரேட் வளத்தை அளிப்பதால் மண் அதிக வளம் பெறுகிறது.

உண்மையில் சுற்றுச்சூழலினை தூய்மையாக வைத்துகொள்ள இந்த சிவப்பு தீவனப்புல் மிகவும் உதவியாக இருக்கும்.

சிவப்பு தீவனப்புல் கால்நடைகளுக்கு புரதம் நிறைந்த தீவனத்தை வழங்குகிறது. இந்த தீவனத்தை பசு உண்டால் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பசுவிற்கு கிடைக்கும். இதனால் பால் அதிகமாக கிடைக்கும். வெள்ளை தீவனப்புல்லினை ஒப்பிடும்போது சிவப்பு தீவனப்புல் புரதம் மிகவும் மெதுவாக செரிக்க உதவுகிறது, எனினும் இந்த சிவப்பு தீவனப்புல் இரண்டு அல்லது மூன்று பருவங்களில் மட்டும் நன்கு வளரும் தன்மை கொண்டது. இந்த சிவப்பு தீவன புல் மரபணு ஐரோப்பா முழுவதும் சோதித்ததில் இயற்கையான விவசாயத்தினை மேற்கொள்ள இது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த சிவப்பு தீவனபுல் உயர்ந்த புரத ஆற்றலை கொண்டுள்ளதால் வளிமண்டல நைட்ரஜனை சரி செய்யும் ஆற்றல் கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புல் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக உள்ளது. தற்போது இந்த புல் மரபணுவினை பயன்படுத்தி பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக IBERS ஆராய்ச்சி வல்லுனரான லாய்ட் கூறியுள்ளார்.

http://www.sciencedaily.com/releases/2015/11/151130130027.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj