Site icon Vivasayam | விவசாயம்

மத்திய அமெரிக்காவில் புதிய வகை பீன்ஸ்

தற்போது மத்திய அமெரிக்காவில் புதிய பீன்ஸ் வகையை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்கலாம்.

இந்த பீன்ஸ் மற்ற பீன்ஸ் வகைகளை காட்டிலும் மிகுந்த சிறப்பான வேறுபாடு காணப்படுகிறது. இந்த புதிய வகை பீன்ஸ் தாவரம் வறட்சி காலத்தில் அதிக விளைச்சலினை விவசாயிகளுக்கு கொடுக்கும் என்று கொலம்பியாவின் Honduran நிபுணர் கால்வடார் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த புதிய வகை பீன்ஸ் விதைகள் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கிறது.

இந்த பீன்ஸ் தாவரம் எந்த வகை காலநிலையிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. இந்த தாவரம் கலப்பு இனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். இது கண்டிப்பாக விவசாயிகளுக்கு மிகுந்த பயனை அளிக்கும் என்று சால்வடார் நம்புகிறார்.

http://www.sciencedaily.com/videos/a1f9ecc7329f56d6f6c4df95fd2d0b5a.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version