தென் ஆப்பிரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வறட்சியினை சந்தித்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலைகள் அபரிவிதமாக அதிகரித்துள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள கால்நடைகள் தற்போது போதிய உணவு இல்லாமல் இறந்து வருகின்றன என்று தகவலறிக்கை கூறுகிறது. அங்குள்ள காட்டு விலங்குகளும் போதிய உணவின்றி அழிந்து வருவதாக தகவலறிக்கை கூறுகிறது.
இதனால் தென் ஆப்பிரிக்காவில் 1982-ல் ஏற்பட்ட ELNINO பாதிப்பு தற்போது ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது அந்நாட்டு அரசாங்கம் வறட்சி கால அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வறட்சி பாதிப்பால் ஜேகன்ஸ் பர்க்கில் இருந்து 425km தொலைவில் விவசாய நிலம் வறண்டு உள்ளது. நிறைய விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் நீர் இல்லாமல் இருப்பதால் வாழ வழியில்லாமல் தடுமாறி வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வறட்சி பாதிப்பு மிக அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வறட்சி பாதிப்பால் விவசாயிகள் தங்களுடைய நிலத்தை விட்டுவிட்டு பிழைப்பினை தேடி செல்லும் அவலநிலை உருவாகி உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மிக முக்கிய காரணம் காலநிலையால் ஏற்பட்ட மிகப்பெரிய மற்றமே என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான நாடுகளில் தற்போது மிகப்பெரிய அழிவு ஏற்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் என்னெவென்று பார்த்தால் மனிதர்களாகிய நாம் செய்யும் மாசுபாடே ஆகும் என்று கூறப்படுகிறது. அறிவியலின் நன்மைகளை விடுத்து அதனை அழிவிற்கு நாம் பயன்படுத்துவதாலேயே இந்த வறட்சி ஏற்படுகிறது.
http://www.bbc.com/news/world-africa-34884135
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli