Site icon Vivasayam | விவசாயம்

பீச் பழத்தின் பிறப்பிடம் சீனா

தற்போது விஞ்ஞானிகள் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பீச் மரத்தை சீனாவில் கண்டறிந்துள்ளனர். அந்த பீச் மரங்கள் தற்போது சீனாவில் மட்டும்தான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த பீச் மரங்களின் பழங்கள் மிகுந்த பயனை மனிதர்களுக்கு அளிக்கிறது. இது பரிணாம வரலாற்றில் புதிய ஒளி வடிவத்தை கொடுக்கிறது. Paleobotany பேராசிரியர் பீட்டர் வில்ஃப் இந்த பழத்தின் ஆற்றலை பற்றி விரிவாக செய்தியாளர்களிடம் கூறினார். தற்போது மேலும் விஞ்ஞானிகள் இந்த பீச் பழ படிமங்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பீச் மரங்கள் சீனாவில்தான் தோன்றியிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தோராயமாக 8000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே காட்டுமக்கள் இந்த பீச் பழங்கள் சீனாவின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதை அதிர்ஷ்ட பழமாக சீனர்கள் கருதுகின்றனர். பீச் மரங்கள் மனித குடியேற்றத்திற்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறது என்று வில்ஃப் கூறினார். இதனை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் ரேடியோ கார்பனை பயன்படுத்தி உள்ளனர். தற்போது இந்த மரத்தின் படிமானங்கள் அடங்கிய பிளியோசீன் பாறைகள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் பீச் பழத்தின் விதைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. பீச் பழத்தின் தடிமன்  மற்றும் அதன் வடிவம் 5cm  அளவு கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது பயன்படுத்தப்படும் பழத்தைக் காட்டிலும் இந்த பீச் பழம் மிகச்சிறந்த சுவையுடன் இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151201141242.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version