University of Georgia- யாவின் Sonia Altizer மற்றும் அவருடைய குழு தற்போது வண்ணத்துப் பூச்சி பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் தற்போது வட அமெரிக்காவில் உள்ள மோனர்ஜ் வண்ணத்துப்பூச்சிகள் இடமாற்றம் மிக குறைவாகவே உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
எப்பொழுதும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வண்ணத்துப்பூச்சிகள் தன் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு பறந்து செல்லும். ஆனால் அது தற்போது அது மிகவும் குறைந்துள்ளது. தொலைதூர பயணங்கள் விலங்குகளுக்கு ஏற்படும் ஒட்டுண்ணி நோய் குறைவதற்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆகும். ஆனால் தற்போது மோனர்ஜ் வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வு மிக குறைவு இதனை பற்றி ஆய்வு செய்தது, பெரும்பாலும் மத்திய மெக்ஸிக்கோ பகுதியில் குளிர் தளங்களில் வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்வு குறைவாகவே இருக்கிறது. இனப்பெருக்க காலங்களிலும் மோனர்ஜ் வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயரவில்லையென்றால் அதனுடைய இனப்பெருக்க எண்ணிக்கை மிக மிக குறைந்து விடும். இதற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து பார்த்ததில் அந்த மோனர்ஜ் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதேப்போன்று அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மோனர்ஜ் பறவைகள் வடாமெரிக்காவிற்கு பயணம் செய்வது இயல்பானது. ஆனால் அங்கும் தொற்றுநோய் பாதிப்பால் தற்போது இடம்பெயர்வு குறைந்துள்ளது. இதற்கு காரணம் வண்ணத்து பூச்சிகளின் இறகு வடிவம் குறைந்ததே என்பது இப்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதானல் மோனர்ஜ் இன வண்ணத்துப்பூச்சிகளின் இனம் குறைந்து வருகிறது.
வண்ணத்துப் பூச்சிகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொண்டால் அந்த பூச்சிக்கு ஏற்படும் நோய்கள் மிக விரைவாக குணமடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்வு நிகழ்கிறது. இதனால் அப்பூச்சி இனங்களுக்கு அதிக பாதுகாப்பே ஏற்படும்.
http://www.sciencedaily.com/releases/2015/11/151125143624.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli