Vivasayam | விவசாயம்

விவசாயம் செய்யும் பெண்கள்

விவசாய நாடான நம் நாட்டில் ஆண்களே அதிக அளவில் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது மாகாராஷ்டிராவில் உள்ள பெண்கள் அவர்களுடைய நிலத்தை அவர்களே டிராக்டரில் உழுது பயிர்செய்து வருவது நம்மை ஆர்ச்சர்யப்பட வைத்துள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள 3 பெண்கள் தைரியமாக தங்களுடைய நிலத்தில் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

2

மாகாராஷ்டிராவில் உள்ள வைசாலி ஜெயந்தி வயது 40, இவர் கணவனை இழந்தவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். இதேப்போல் ராஜஸ்தானிலும் ரிம்பி குமாரி 32, கரம்ஜித் 26 இரண்டு திருமணமாகாத தங்கைகள் விவசாய தொழிலினை தைரியமாக மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பற்றி விசாரிக்க செய்தியாளர் குழு மகாராஷ்டிரா சென்ற போது வைசாலி கூறியதாவது: “என்னுடைய கணவர் 6 வருடத்திற்கு முன்பு விவசாயத்திற்கு கடன் வாங்கி இருந்தார். அப்போது எங்கள் ஊரில் மழை மிகவும் குறைவு அதனால் பயிர்கள் விளைச்சல் மிக மிக குறைந்தது. அதனால் மனம் உடைந்து என் கணவர் இறந்து விட்டார். அதிலிருந்து நான்தான் எங்களுடைய நிலத்தில் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறேன்” என்று அவர் கூறினார்.

அவர் தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தில் பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் பயிர்களை பயிரிட்டுள்ளார். இதேபோல ராஜஸ்தானில் உள்ள ரிம்பி குமாரியும் தங்களுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலத்தில் கோதுமை, அரிசி சோயா பீன்ஸ் பயிர் வகைகளை பயிரிட்டு வருவதாக கூறியுள்ளனர். இந்தியாவில் உள்ள பெண்கள் கல்யாணம் செய்து கொண்டு வீட்டிலே சமையல் செய்து காலத்தை கழித்து வருகின்றனர். ஆனால் இந்த விவாசாய எண்ணற்ற சாதனைகளை செய்ய விரும்புகிறேன். நானும் கண்டிப்பாக மிகச்சிறந்த விவசாயாக வருவேன் என்றும் அவர் கூறினார். அது மட்டுமல்லாது இந்திய பெண்கள் அனைவரும் என்னைப்போன்று தைரியமாக விவசாயத்தை செய்ய வேண்டும் அப்போதுதான் இந்நாடு முன்னேறும் என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.com/news/world-asia-india-34902325

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version