Site icon Vivasayam | விவசாயம்

சுனாமி பேரலைகளிலிருந்து நம்மை பவளப்பாறைகள் பாதுகாக்கும்

உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த மிக பிரபலமான பவளப்பாறைகள் கொண்ட நாடு ஆஸ்திரேலியா. தற்போது அந்த பவளப்பாறைகளை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து பார்த்ததில் அந்த பவளப்பாறைகள் சுனாமி அலைகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று கண்டறிந்துள்ளனர். இதற்கு தகுந்த ஆதாரத்தையும் அவர்கள் காட்டி உள்ளனர்.

அவர்கள் சுனாமி தாக்குதலை பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் நீருக்கு அடியில் சுமார் 20,000-14,000 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி பாதிப்பு 2-3m அளவு இருந்தது. இதனால் அப்போது கடைசி பனிக்காலத்தில் Islands பகுதியில் தண்ணீரின் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு 7கிமீ அளவிலான நிலச்சரிவு குயின்லாந்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கு சுனாமி தாக்கம் மிகமிக குறைவாக இருந்தது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம்  பவளப்பாறைகளே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பவளப்பாறைகள் நீரினை அப்படியே உறிஞ்சி அதன் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வின் இணை பேராசிரியர் வெப்ஸ்டர், கடல் அடியில் நிலச்சரிவு ஏற்பட்டால் சுனாமி உருவாகிறது. இந்த சரிவினை பொறுத்து சுமார் 3மிமீ அளவிற்கு சுனாமி அலைகள் ஏற்படும். இதனை பவளப்பாறைகள் குறைக்கிறது என்று கூறினார். University of York குழு சுனாமி தாக்கும் காட்சியினை உருவாக்கி அந்த பகுதியில் பவளப்பாறைகளை வைத்துப்பார்த்ததில் அதன் தாக்கம் மிக குறைவாக இருப்பதாக தெரிவித்தது. பவளப்பாறைகளில் viper slide அதிக அளவில் இருப்பதால் நீரினை உறிஞ்சி தடுக்கும் ஆற்றல் அதில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

http://www.sciencedaily.com/releases/2015/11/151125104753.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version