Skip to content

’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது

Lowa State University-ஐ சார்ந்த ஈவ்சிர்கின் உர்டல்லே மற்றும் லிங்க்லி  விஞ்ஞானிகள் இணைந்து தற்போது பயிர்களுக்கு புதிய புரத ஆற்றலை அதிகரிக்கும் சத்தினை கண்டறிந்துள்ளனர். இந்த வகை புரத சத்துக்கள் சோளம், அரிசி, சோயா போன்ற தாவரங்களில் பயன்படுத்தினால் அதன் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்று ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதன்படி அவர்கள் தற்போது கண்டறிந்த இந்த மரபணுவிற்கு பெயர் QQS என்று பெயரிட்டுள்ளனர். இந்த மரபணுவினை பயிர்களுக்கு செலுத்தினால் கண்டிப்பாக விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதற்கு அமெரிக்கா, காப்புரிமை வழங்க உள்ளதாக தெரிகிறது.

இந்த மரபணுக்கள் அதிகமாக அரபிடோப்சிஸ் விதைகள் மற்றும் இலைகளில் காணப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மரபணு புரத சத்துக்கள் பிற தாவரங்களின் மரபணுவினை அதிக ஆற்றல் கொண்டதாக மாற்றுகிறது என்று கூறுகின்றனர்.

தேசிய அறிவியல் அகாடெமி கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில் “Orphan Gene” அதிகமாக அரிசி, சோளம், சோயாபீன்ஸ் ஆகியவற்றில் இருப்பதால் இந்த மரபணுவினை மற்ற பயிர்களுக்கும் உபயோகித்தால் பயிர் விளைச்சல் கண்டிப்பாக இரட்டிப்பாகும் என்று கூறியது. ஆனால் விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்த புரதத்தால் அதிக புரத சத்து மிக்க பயிரினங்களை உற்பத்தி செய்ய முடியும் என்று அனைவரும் நம்புகின்றனர்.

உலகில் தற்போது மரபணு பயிர்களை ஆராய்ச்சி செய்ய பல மில்லியன் டாலர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் தேவைப்படுகிறது. இதனை தவிர்க்க ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களிலிருந்து புதிய புரத மரபணுவினை உற்பத்தி செய்துள்ளனர். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்த “Orphan Gene” NF-YC4 என்று அழைக்கப்படுகிறது. இந்த புரதம் அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளதாம். இந்த புரத மரபணுவினை அரிசி, சோளம் மற்றும் சோயாபீன்ஸில் பயன்படுத்தினால் கண்டிப்பாக அதில் அதிகமான புரத சத்து உற்பத்தி ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

http://www.sciencedaily.com/releases/2015/11/151113120253.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj