சைன்ஸ் அட்வான்சஸ் இதழ் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்வீடன் Linkoping பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்கானிக் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை சார்ந்த ஆய்வாளர்கள் கொண்ட ஒரு குழு, வெட்டப்பட்ட ரோஜாக்களில் மின்னணு சுற்றுகளை பயன்படுத்தி புதிய பயன்பாடு ஒன்றை கண்டுபிடித்தனர்.
இந்த ஆய்வை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்தனர். அவர்கள் 1990-ல் மரங்களின் மீது மின்சாரத்தை செலுத்த முயற்சி செய்தனர், ஆனால் நிதி பிரச்சனையின் காரணமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது, அவர்களின் ரோஜாக்களில் மின்னணு சுற்றுகள் உருவாக்கும் முயற்சி வெற்றி கண்டது.
அனைத்து ஆற்றலும் பச்சையத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இது பச்சை மின் உணரியை உருவாக்குகிறது. இவை அனைத்தும் இயற்கையாகவே நிகழுகிறது. இந்த ஆய்வுக்கு தாவரங்களின் மிகவும் மேம்பட்ட மற்றும் தனிப்பட்ட அமைப்புகள் பயன்படுத்தபடுவதாக ஆய்வின் முன்னனி ஆசிரியர் Magnus Berggren கூறினார்.
தொழில்நுட்பத்தின் இந்த வகையான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கும் மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு வரலாறு கண்டிராத வளர்ச்சியை அடைய முடியும் என்று கருதப்படுகிறது. இது நமது சுகாதார அளவை மேம்படுத்த பயன்படும் என்று கூறுகிறார்கள். விஞ்ஞானிகள் இந்த செடியில் இருக்கும் உணரி, இதய ஆரோக்கியம் அல்லது மூளை செயல்பாடுகளை கண்காணிக்குமா என ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
http://www.popsci.com/scientists-fuse-electronic-circuits-into-living-roses
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli