Site icon Vivasayam | விவசாயம்

அமேசான் காட்டில் 50% மரங்கள் அழிந்துவிடுமாம்

உலகில் உள்ள காடுகளில் அடர்த்தியான காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டு  மரங்கள் தற்போது பாதி அழிந்துவிட்டது என்று தற்போதைய  தகவலறிக்கை கூறியுள்ளது.

இதன்படி அமேசான் காட்டிலுள்ள 57% மரங்கள் புவி வெப்பமயமாதலினால் அழிந்துவிட்டது என்று தேசிய ஆராய்ச்சி குழுமம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மழை காடு என்று அழைக்கப்படும் இது சுமார் 2.2 மில்லியன் சதுர கி.மீ பரவி இருந்தது. ஆனால் தற்போது 12% தொழில் மயமாதலினால் அழிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலும் இக்காட்டின் தென்கிழக்கு பகுதிகள்தான் அதிக அழிவினை சந்தித்துள்ளது.

தற்போது டிர்ஸ்டீஜ் மற்றும் அவருடைய குழு அமேசான் காட்டை பற்றிய படக்காட்சிகளை விரிவாக வெளியிட்டுள்ளது. அமேசான் முழுவதும் மரம் மிகுதியாக இருந்தால் எப்படி இருக்கும், இல்லையெனில் எப்படி இருக்கும் என்று விரிவான மாதிரியினை வழங்கி உள்ளது. தற்போது அமேசான் காடு அழிக்கப்பட்டு  வருவதால் வரும் 2050-ம் ஆண்டிற்குள் மீதமுள்ள 40% காடுகள் அழிந்துவிடும் என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

பூமியில் உள்ள காடுகளில் 90% வெப்பமண்டல காடுகளே ஆகும். வெப்பமண்டல காடுகள் தற்போது அழிந்து வரும் சுழலில் அமேசானில் மட்டுமே தற்போது வரை வெப்பமண்டல மரங்கள் 50% பாதுகாப்பு நிலையில் உள்ளது. எனவே இதனை கண்டிப்பாக பாதுகாத்தே ஆக வேண்டும் என்று தேசிய இயற்கை பாதுகாப்பு மையம் கூறியுள்ளது. இதற்கு அரசாங்கம் மிகுந்த ஒத்துழைப்பினை நல்க வேண்டும் என்று கூறி உள்ளது.

http://www.popsci.com/over-half-all-amazonian-tree-species-are-globally-threatened

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Exit mobile version