தேசிய அறிவியல் அகாடெமி மிக்சிகன் மாநில பல்கலைகழக ஆராய்ச்சியார்களுடன் சேர்ந்து அதிக உயிரி எரிசக்தி ஆற்றலை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த உயிரி எரிசக்தி ஆற்றலானது புல்வெளிகள் பூக்கும் தாவரங்கள், சோளச் செடிகள், Swithch Grass போன்றவற்றிலிருந்து அதிகம் தயாரிக்கப்படுகிறது.
இதனை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்த மற்றொரு குழு புல் பயிர்கள் அதிகம் உள்ள இடங்களில் உயிரி எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புல் பயிர்கள் மூலம் ஆற்றல் சேமிப்பு 30% அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆற்றலை பெறுவதற்கு கண்டிப்பாக ஒருங்கிணைந்த நில பயன்பாட்டு விவசாய கொள்கை மற்றும் திட்டமிடல் அமைப்பு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆய்வளார்கள் கூறுகின்றனர்.
விவசாயிகள் பாதிப்படையாத வண்ணம் அவர்கள் பயிரிடும் நிலங்களில் உயிரி எரிசக்தி ஆற்றலை உருவாக்கும் பயிரினங்களை உற்பத்தி செய்தால் இது உலகிற்கே பெரிய உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
http://www.sciencedaily.com/releases/2014/01/140113154221.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli