பூமியில் மொத்த நிலத்தடி நீரின் அளவு சுமார் 23 மில்லியன் கன கி.மீ வரை பரவி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறி உள்ளனர். இந்த நீர் அனைத்தும் நம் பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் மண் இடுக்குகளில் உள்ளது என்று கூறி உள்ளனர். பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 180m ஆழமான அடுக்கில்தான் நீர் உள்ளது என்று முன்னர் கூறப்பட்டது.
ஆனால் தற்போது கனடிபூன் ஆராய்ச்சி குழுவின் கண்கீட்டின்படி பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரில் 6% மட்டுமே மிகவும் பயனுள்ள தண்ணீர் என்று கூறி உள்ளது. அதாவது நவீன நிலத்தடி நீர் ஆய்வின்படி மிக குறைந்த அளவே நிலத்தடி நீர் உள்ளது என்று கூறப்படுகிறது.
தற்போது நிலத்தடி நீரின் குறைவிற்கு காரணம் மனிதர்கள் பூமியினை மாசுபடுத்துவதே என்று University of Victoria-வின் ஆராய்ச்சியாளரான டாம் கிளசன் கூறினார். நிலத்தடி நீரினை பாதுகாப்பது மனிதர்களின் கையில்தான் உள்ளது என்று அவர் கூறினார்.
பூமியின் மேற்பரப்பில் சுமார் 2km அளாவிற்கு தண்ணீர் சேமிக்கப்படுகிறது என்று டாக்டர் கிளிசான் கூறினார். அவருடைய அறிக்கையில் தண்ணீர் எப்படி நிலத்தின் அடியில் உறிஞ்சப்படுகிறது என்று குறிப்பிடப்படுள்ளது. இந்த அளவீட்டை Tritium அளவீட்டினை கொண்டு அளவிடப்படுகிறது. இது 50 ஆண்டுகளுக்கு முன்பு வளிமண்டலத்தில் ஏற்பட்ட கதிரியக்க மாற்றத்தை பற்றியும் அதனால் நிலத்தடி நீர் குறைந்தது பற்றியும் விரிவாக கூறி உள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் நவீன நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நீல நிறம் பழைய நிலத்தடி நீர் இல்லாததும் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பல நீர் நிலைகள் தற்போது உப்பு நீராகவும், சில இடங்களில் நீரின் இருப்பு இல்லாததையும் இந்த வரைபடம் குறிப்பிட்டுள்ளது
நவீன முறையில் இந்த நிலத்தடி நீரின் அளவினை மேம்படுத்த பல நுண்ணிய திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று Nature Geoscience விஞ்ஞானி யிங்பேன் கூறினார். அந்த முறைகளை பற்றி கீழுள்ள படத்தில் அவர் விரிவாக கூறி உள்ளார்.
http://www.bbc.com/news/science-environment-34837461
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli