Vivasayam | விவசாயம்

பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது

நிகோட்டின் போன்ற பூச்சிகொல்லிகளால் தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை பாதிக்கின்றது என்று ஆய்வு கூறுகிறது.

ஆப்பிள் மரத்திலிருந்து இரசாயனம் வெளிப்படும் போது தேனீக்கள் மகரந்தம் சேகரித்தல் குறைந்து அந்த பயிரின் விளைச்சலை குறைக்கும்.

விவசாயிகள் neonicotinoid பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் வேளாண்மை தொடர்பான உள்ளார்ந்த பாதிப்புக்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பழம், விதைகள் மற்றும் எண்ணெய்கள் உட்பட பல பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் மிகவும் அவசியம் ஆகும்.

3 (1)

உலகில் ஒரு ஆண்டிற்கு 152 பில்லியன் பவுண்ட் முதல் 379 பில்லியன் பவுண்ட் வரையிலான மகரந்தச் சேர்க்கை சேவைகளை தேனீக்கள் மற்றும் பிற பூச்சிகள் செய்கின்றன என்று ஆய்வு கூறுகிறது.

பூச்சிக்கொல்லி அபாயத்தால் தேனீக்களால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை குறைவதை முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  லண்டன் ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் டாக்டர் தாரா ஸ்டான்லி கூறினார்.

“நாம் சாப்பிடகூடிய உணவில் பழப்பயிர்கள், கொட்டை பயிர்கள், விதை பயிர்கள் மற்றும் எண்ணெய் பயிர்கள் போன்ற சுமார் 30% உணவுகள் தேனீக்கள் மற்றும் பிற பூச்சிகள் மூலம் தான் மகரந்த சேர்க்கை செய்து பயிர்களை உருவாக்குகின்றன என்பதால் மகரந்த மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்கள்.

neonicotinoid பூச்சிக்கொல்லிகள் அதிகமாக பெருகி வருகிறது. உலகளாவிய பூச்சிக்கொல்லி மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுவதால்  தேனீக்களின் நடவடிக்கை மற்றும் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை மகரந்த சேர்க்கை தாக்கம் பற்றி ஆராயப்படவில்லை.

UK மற்றும் கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் மூன்று குழுக்களாக பிரிந்து வெவ்வேறு அளவுகளில் உள்ள neonicotinoid பூச்சிக்கொல்லிகளை ஆப்பிள் மரங்களில் பயன்படுத்தி சோதனை செய்தனர்.

ஆப்பிள் மலர்களில் காணப்படும் பூச்சிகொல்லிகளால் தேனீக்கள் குறைவான மகரந்த சேர்க்கையை நிகழ்த்தின என்று ஆய்வில் கண்டறிந்ததாக இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் மைக் Garratt கூறினார்.

பூச்சிகொல்லிகள் எப்படியோ தேனீக்களுக்கு பூக்கள் வித்தியாசமாக இருப்பதை தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.

“neonicotinoid பூச்சிகொல்லிகளின் எதார்த்தமான அளவுகள் உண்மையில் பயிரின் மகரந்தச் சேர்க்கையை பாதிக்காது” என்று இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த, லான்காஸ்டர் பல்கலைகழக பேராசிரியர் பெலிக்ஸ் Wäckers கூறினார்.

http://www.bbc.co.uk/news/science-environment-34857858

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version