பொதுவாக பறவைகள் மீன், நத்தைகள் மற்றும் கடல் நண்டு போன்ற நீர்வாழ் விலங்குகளை அதிகம் உண்டு வாழ்கின்றன. ஆனால் தற்போது பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் உள்ள மக்கள் பறவைகளுக்கு ரொட்டி, துரித உணவு மற்றும் பாப்கார்ன் போன்ற உணவுகளை கொடுத்ததால் அந்த பறவைகள் அதையே சாப்பிட பழகிவிட்டது என்று ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் சோனியா ஹெர்னாண்டஸ் கூறியுள்ளார். பறவைகளின் இந்த உணவு மாற்ற முறையினால் அது மனிதர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சால்மோனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட வெள்ளை அறிவால் மூக்கன் பறவை மனிதற்களுக்கு உடல் நிலை பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை கண்டறிந்தனர். குறிப்பாக புளோரிடாவில் உள்ள மக்களுக்கு இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டது என்று ஹெர்னாண்டஸ் கூறினார்.
இதை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இதில் வெள்ளை அறிவால் மூக்கன் பறவை பொதுவாக நாடோடி நிலையில் உள்ள பறவைகளாகும். இது ஒவ்வொரு நாளும் உணவை தேடி பல மைல்கள் தூரம் பயணம் செய்யக்கூடியவை ஆகும். ஆனால் இந்த பறவைகள் தற்போது ஆற்றலை செலவளிக்காமல் நகரங்களில் உள்ள பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் உள்ள மனிதர்கள் கொடுக்கும் உணவைத்தேடி அலைகிறது என்று அமெரிக்காவில் உள்ள ஈகாலஜி Odum பள்ளியின் பேராசிரியர் சோனியா ஆல்டிஸெர் கூறினார்.
உடல் உழைப்பை பயன்படுத்தாத நடத்தையை கொண்ட பறவைகளின் மலத்தில் நிறைய நோய்க்கிருமிகளை அனுமதிக்கின்றன என்று அவர் கண்டறிந்து கூறியுள்ளார். இதனால் பறவைகள் மற்றும் மனிதர்கள் இருவருக்கும் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli