Vivasayam | விவசாயம்

BT விதை பருத்தியால் விவசாயிகள் பாதிப்பு

இந்திய விவசாயிகள் தற்போது மிகப்பெரிய பேரழிவினை சந்தித்துள்ளனர். என்னவென்றால் புதிய பருத்தி விதைகளை கொண்டு பயிரிடப்பட்ட பருத்தி பூச்சிகளால் பாதிப்பு அடைந்து சாகுபடியை முழுவதும் குறைத்துள்ளது. இதற்கு காரணம் அந்த பயிர் விதைப்பு பற்றிய தொழில்நுட்பம் தவறானதாக கூறப்பட்டதே, முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹரியான பகுதிகளில் பருத்தி மிகவும் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால் பல கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். நேற்றைய நிலவரப்படி மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தற்போது பருத்தி விளைச்சலில் அதிக பாதிப்பு அடைந்ததால் அரசு உதவி கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே விவசாயிகள் முந்தைய ஆண்டுகளில் GM பருத்தி விதையை கொண்டு விவசாயத்தை மேற்கொண்டபோது அதிக அறுவடை மற்றும் இலாபம் சம்பாதித்தனர்.

2

ஆனால் தற்போது புதிய தொழில் நுட்பத்தில் தயரிக்கப்பட்ட பருத்தி விதையினால் அறுவடை முழுவதும் பாதிப்படைந்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு GM பருத்தி வணிகம் உலகின் சிறந்த பருத்தி பொருள் ஏற்றுமதி செய்யும் பருத்தி பொருளாக இருந்து வந்தது. தற்போது பயன்படுத்தப்பட்ட BT விதை பருத்தியினால் அதிகமான பூச்சிகள் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் முழுவதும் பாதிப்படைந்துள்ளது என்று விவசாயிகள் ஆதரத்துடன் கூறினார்கள். அவர்கள் மேலும் எங்களுக்கு இந்த BT வகை பருத்தி விதை இனி தேவையே இல்லை என்று கோபமாக கூறினார்கள். வெள்ளை வெடிப்பு பருத்தி வகையான GM விதைகள் மற்றும் GM  கடுகு விதைகளை பிரதமர் மோடி எங்களுக்கு வழங்க உத்தரவிடுமாறு அவர்கள் கூறினார்கள். அதுமட்டுமல்லாது அதிக விளைச்சல் தரும் பயிர் வகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கூறினார்கள்.

https://in.finance.yahoo.com/news/pest-attack-indian-farmers-shun-gm-cotton-095923407–sector.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version