தற்போது UN (United States) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 50 மில்லியனிற்கு மேலான மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் பாலைவனமாக மாறிவருவதால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறியது. பெரும்பாலும் இந்த பிரச்சனையால் Sub-saharan ஆப்பிரிக்காவின் பகுதியில் உள்ள மக்களே, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளுக்கு 2020-க்குள் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
Sub-Sahavan பகுதியில் உள்ள விவசாயி ஒருவரான கால்டியோ டயோலா தற்போது அவர்கள் வாழும் பகுதி பாலைவனமாக மாறி வருகிறது என்று விரிவாக கூறினார். அவர் கூறியதாவது: அவர் சிறிய குழந்தையாக இருந்தபோது அவர்கள் வாழும் நிலத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இந்த பகுதியில் அதிகமான காற்றின் தாக்கத்தால், நிலத்தில் உள்ள மண் அடித்து செல்லப்பட்டு வருகிறது.
இதனால் தரமான விவசாய மண் பாலைவனமாக மாறிவருகிறது. இதனால் தற்போது அங்கு மரம், புல் கூட வளருவதில்லை. இதனால் அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் கூட போதிய உணவு இல்லாமல் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து, திரிந்து புல் பகுதியை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின்படி உலக அளவில் 1.5 பில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஜக்கிய நாடுகள் சபை கூறி உள்ளது. இந்த பாதிப்பிற்கு பெரிதும் காரணம் மனித செயல்பாடுகளினால் ஏற்பட்ட மாசுபாடு ஆகும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் உலகில் 12 மில்லியன் ஹெக்டர் விளை நிலங்கள் பாலைவனமாக மாறி வருகிறது. அந்த நிலங்களில் இதற்கு முன்பு 20 மில்லியன் டன் தானிய வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா பகுதியில் உள்ள பண்டேயேக்கா கிராமத்தில் உள்ள சிகாக்கே லு என்பவர் அவருடைய நிலத்தில் பயிரிடப்பட்ட கடலை செடியினை இதற்கு ஆதாரமாக காட்டினார். அதில் அனைத்து கடலைகளும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் மண்ணின் தரம் குறைந்தது ஆகும். கடந்த 10-15 ஆண்டுகளாக இங்குள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவருகிறது என்று கண்ணிரூடன் கூறினார். இதனால் மக்கள் பிழைப்பை தேடி பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
http://www.bbc.com/news/world-africa-34790661
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli