Skip to content

உலகின் மிகச்சிறிய நத்தை

உலகின் மிகச் சிறிய நத்தை, மலேசியாவில் உள்ள போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நத்தைக்கு Acmella nana என்று பெயரிட்டுள்ளனர். இது 0.7 மில்லி மீட்டர் அளவை கொண்டுள்ளது. இது மிகச்சிறிய ஒளிஊடுருவக்கூடிய வெள்ளை ஓட்டை கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் காடுகளில் இதை கண்டுபிடிக்க ஒரு நுண்ணோக்கி பயன்படுத்த வேண்டியிருந்தது என்று கூறியுள்ளனர்.

2 (1)

இந்த சிறிய முதுகெலும்பற்ற நத்தை முந்தைய சாதனையாளரை விட பத்தில் ஒரு மில்லி மீட்டர் சிறியதாக உள்ளதாக கூறியுள்ளனர்.

புதிதாக அடையாளம் கண்ட இந்த நத்தைக்கு மலேசியா மற்றும் டச்சு ஆராய்ச்சியாளர்கள் Acmella nana என்று பெயரிட்டுள்ளனர். இந்த பெயரில் உள்ள nana என்பது லத்தீன் வார்த்தையான nanus-லிருந்து பெறப்பட்டதாகும். இதற்கு “குள்ளம்” என்று பொருள். இது சரியாக எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை மெல்லுடலிகள் பற்றிய ஆராய்ச்சியின் போது இதை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது ஈரமான சுண்ணாம்பு பரப்புகளில் வாழும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

3 (1)

ஆராய்ச்சியாளர்கள் இதை காடுகளில் உயிரோடு பார்த்ததில்லை என்பதால் Acmella nana சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது தெளிவாக தெரியவில்லை என்றனர். ஆனால் ஈரமான சுண்ணாம்பு பரப்புகளில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை உண்ணக்கூடியதாக இருப்பதால் இந்த நத்தையும் உண்ணும் நத்தை இனங்கள் அனுசரிக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

4 (1)

இந்த ஆய்வின் போது, விஞ்ஞானிகள் Acmella nana நத்தை உட்பட மொத்தம் 48 புதிய வகை நத்தை இனங்களை கண்டறிந்தனர். ஆராய்ச்சியாளர்களின் இந்த முழு ஆய்வு பற்றி ZooKeys இதழில் வெளியிட்டுள்ளனர்.

http://www.dnaindia.com/scitech/report-meet-the-tiniest-snail-in-the-world-2142187

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

1 thought on “உலகின் மிகச்சிறிய நத்தை”

  1. Pingback: உலகின் மிகச்சிறிய நத்தை | பசுமை தமிழகம்

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj