பசிபிக் Northwest National Laboratory தற்போது கலிபோர்னியாவின் காலநிலையை பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் திடுக்கிடும் ஒரு செய்தியை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வருங்காலத்தில் கலிப்போர்னியாவில் EL Nino மற்றும் EL Nina புயல் தாக்க வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் மேற்கண்ட ஆய்வின்படி கலிபோர்னியாவில் 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ள சீர்கேட்டை விட தற்போது 21-ம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2100-ம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர். வரும் காலங்களில் ஒவ்வொரு இரண்டு ஆண்டு அல்லது ஏழு வருடங்களில் El nino பாதிப்பு Tropical Pacific Ocean பகுதிகளில் அதிகமாக நடைபெறும் என்றும் இதனால் குளிர்காலம் மற்றும் மழைக் காலங்களில் கலிப்போர்னியாவின் காலநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது பல்வேறு வகையான இயற்கை சீர்கேடுகளும் நடைபெற வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் கலிபோர்னியாவின் புவிப் பகுதிகளை தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர். முந்தைய ஆண்டுகளில் 1920 To 2005-ம் ஆண்டு வரை அதனுடைய காலநிலை பற்றி அறிக்கை, 2006 முதல் 2080 – ம் ஆண்டுகள் வரை ஏற்படும் காலநிலை மாற்ற அறிக்கையை வைத்து பார்த்ததில் பசுமை இல்ல வாயுவின் பாதிப்பு அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் மேற்கண்ட ஆராய்ச்சிப்படி வரும் ஆண்டுகளில் கார்பனின் அளவு 1% ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளனர். இதனை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக 2100-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் மிகப்பெரிய இயற்கை சீர்கேடு நடக்க உள்ளது நமக்கு தெரிந்துள்ளது.
http://www.sciencedaily.com/releases/2015/10/151021161032.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli