மிக்சிகான் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தற்போது தாவரங்கள் தங்களை நோய்களிலிருந்து எப்படி பாதுகாத்துகொள்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்துள்ளது. தாவரங்கள் இயற்கையாகவே தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது தாவரத்தின் ஹார்மோன் மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். தற்போது விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு சத்துக்களை தாவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர்.
இதனால் நோய் எதிர்ப்பு மரபணு தனாகாவே தாவரத்திற்கு கிடைத்துவிடும் என்று MSU துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் ஷெங் யாங் கூறினார். இந்த ஆய்வின் குறிப்பிடத்தக்க நடைமுறை என்னவென்றால் சுமார் 200 பில்லியன் பயிர் இழப்பை ஏற்படுத்தும் தாவர நோய்களை கட்டுப்படுத்த புதிய நோய் எதிர்ப்பு பயிர் செடிகளை வளரவிட்டால் கண்டிப்பாக பயிர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை வெகுவாக குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புதிய வகை நோய் எதிர்ப்பு தாவரம் உணவு பயிர்களை பாதுகாத்து உற்பத்தியை பல்மடங்கு பெருக்க உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
தற்போது கண்டறியப்பட்ட இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாவத்திற்கு பெயர் Jasmonate இது தாவரத்திற்கு ஏற்படும் பூச்சி மற்றும் நோய் பாதிப்பை சீராக்குகிறது. இந்த Jasmonate தாவர குழு பூச்சிகளை அழிக்கும் Coronatione நச்சு பொருளை இயற்கையாகவே தயாரிக்கும். இந்த ஆய்வினை மேற்கொள்ள பல ஆண்டுகள் ஆனது. இப்போது தாவரங்கள் எண்டோஜெனியாஸ் மற்றும் நுண்ணுயிர் நச்சு ஆகியவற்றை ஒப்பிட்டு அதனை வேறுபடுத்தி துல்லியமாக தாவரத்திற்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பயிர்களை முற்றிலும் பாதுகாக்கிறது. இந்த முயற்சியானது எதிர்காலத்தில் தாவரம் நோய்களிலிருந்து முழுவதும் தங்களை பாதுகாத்து கொள்ள புதிய மாற்றத்தினை கொடுக்கும் என்பது உண்மையே.
http://www.sciencedaily.com/releases/2015/11/151102163720.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli