Legue of Uraban Canners மற்றும் Wellestey College –ன் அறிவியல் அறிஞர்கள் தற்போது நகர்புற மரங்களில் உள்ள பழங்களை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் உடலிற்கு நன்மை தரும் பல்வேறு ஆற்றல் சத்துக்கள் அடங்கி உள்ளதாக கூறி உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் போஸ்டன் பகுதியில் உள்ள மரங்களிலிருந்து 166 பழங்களின் மாதிரிகளை (ஆப்பிள், பீச், செர்ரிகள் மற்றும் பிற மரங்களின் பழங்கள்) கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில் அந்த பழங்களில் அதிகப்படியான ஆற்றல் சக்தி இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது அந்த மரங்களின் பட்டைகள் மற்றும் மற்ற பாகங்களை ஆராய்ந்து பார்த்ததில் அங்குள்ள மரங்கள் அனைத்தும் 20-ம் நூற்றாண்டில் இருந்த மரங்களின் விதைகளிலிருந்து வளர்ந்த செடிகள் என்று தெரிய வந்துள்ளது. இந்த மரங்களில் உற்பத்தியாகும் பழங்கள் மனித உடலிற்கு புதிய இரத்தத்தை கொடுக்கும் என்றும் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் நகர்புற தோட்டங்களில் சுரங்க நடவடிக்கைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்தான் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் பேராசிரியர் டான் பிரபெண்டர் கூறினார். ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி நகர்புற மரங்களில் பூச்சிகளை அழிப்பதற்கு வரலாற்று முறையினை பின்பற்றியதே அங்குள்ள பழங்களில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் நகர்புற மண்ணில் குடைவு முறையினை மேற்கொண்டு செடிகளை வளர்த்ததால் பழங்கள் அனைத்தும் அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். இந்த பகுதியில் உற்பத்தியாகும் பழங்களில் அதிக Manganese, Zinc Magnesium, Potassium சக்தி இயற்கையாகவே இடம் பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.
http://www.sciencedaily.com/releases/2015/11/151101150653.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli