Skip to content

தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!

தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி மக்கள் தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால்  அவர்களுடைய மனம் அதிக நலமுடன் இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை Westminister and Essex Universities-ன் அறிவியல் அறிஞர்கள் 269 மக்களை ஆய்வு செய்ததில் மனநலமுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த மக்கள் தோட்டக்கலை பணியினை மேற்கொண்டதே என்று கண்டுபிடித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் மக்களை ஆய்வு செய்து பார்த்ததில் பெரும்பாலான மக்களின் மனநலனிற்கு முக்கிய காரணம் அவர்கள் தினமும் 30 நிமிடம் தோட்டவேலைகளை செய்ததுதான் என்று Journal of Public Health அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி தோட்டக்கலை பணி மேற்கொண்டால் நம்முடைய மனம் மற்றும் எடை ஒரே சீரானதாக உள்ளது என்று கூறுகின்றனர்.

12

அதுமட்டுமல்லாது குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் சோர்வு, மன அழுத்தம், பதற்றம் மற்றும் கோபம் குறைய வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாது சுயமரியாதை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2

பெரும்பாலும் நகர்புறத்தில் உள்ள மக்களே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை குறைப்பதற்கான முக்கிய வழி தோட்டக்கலை பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுசுகாதார பேராசிரியர் ஜான் ஆஷ்டன் கூறினார். தற்போது இங்கிலாந்து அதிபர் தங்கள் நாட்டில் இதனை ஒரு பணியாக மேற்கொள்ள தரிசாக விடப்பட்ட நிலங்களை கொண்டு புதிய தோட்டப்பண்ணையினை மக்களே அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

http://www.bbc.com/news/health-34666231

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj