Dr. எரெஸ் எலியஹ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இணைந்து தாவர சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தாவரம் மேற்கொள்ளும் ஸ்டார்ச் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்தனர்.
அதுமட்டுமல்லாது கார்போஹைட்ரேட் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானிகள் “ஆன்” சுவிட்ச் ஸ்டார்ச் உற்பத்தி முறையினை பற்றி ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால் ஒளிச்சேர்க்கைக்கு உருவாக்கப்படும் எலக்ட்ரான்கள் ஓட்டம், ஒழுங்குமுறை புரதங்களுடன் ஓர் நேரடி தொடர்பு பற்றி ஆய்வு செய்தனர். தற்போது வெய்ஸ் மென் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் “ஆஃப்” சுவிட்ச் ஸ்டார்ச் உற்பத்தி முறையினை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களுடைய முக்கிய நோக்கம் ஸ்டார்ச் பணி நிறுத்தம் அதனுடைய முன்னனி உயிர்வேதியியல் நிகழ்வுகளின் சங்கிலி தொடரை பற்றியதாகும். ஒளி குறைவு எலக்ட்ரான்கள் ஏன் இழக்கிறது என்பது பற்றியும் ”ஸ்டார்ச் தயாரிப்பு நொதி” ஒரு இடைவெளி எடுத்து பரிமாற்றத்தை மேற்கொள்வது” பற்றியும் ஆராய்ச்சி செய்தனர். இதனால் ACTH4 என்ற புரதசத்து ஆக்ஸிஜனேற்றம் மூலம் நடைபெறுகிறது என்பதை கண்டறிந்தனர். மேலும் இவர்கள் இந்த புரதசத்தினை வைத்துக்கொண்டு எதிர் காலத்தில் விவசாய பயிர்களின் ஸ்டார்ச் உற்பத்தியை பன்மடங்கு மேம்படுத்த முடியும் என்றும் கருதுகின்றனர்.
http://www.sciencedaily.com/releases/2015/10/151026180916.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli