தண்ணீர் கிடைக்காமல் நிறைய இடங்களில் வறட்சி நிலை ஏற்படுகிறது. தண்ணீர் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிதான் விவசாயம் செய்வதாக இருக்கிறது. அதனால் விவசாயம் செய்யவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
வறட்சியையும், உப்புத் தண்ணீரையும் தாங்கும் திறன் கொண்ட தாவரங்களைக் கண்டறிந்து அவற்றின் ஜீன்களை பெற்று பல தாவரங்களை பெருக்கும் திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர்.
பயோடெக்னாலஜி துறையை சேர்ந்தவர்கள் தற்போது இந்த முயற்சியை செய்கிறார்கள். இவர்கள் வறச்சியை தாங்கக்கூடிய செடிகளில் இருந்து ஜீன்களை சேகரித்து, தற்போது பயன் தந்து கொண்டிருக்கும் தாவரங்களுக்குள் புகுத்த முயற்சி செய்கிறார்கள். இதனால், ஜெல் போன்ற தன்மை கொண்டவை வறட்சி நிலையில் உள்ள தாவரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். இதனால் வறட்சியை தடுக்க முடியும் என்று பயோடெக்னாலஜி துறையினர் கூறுகிறார்கள். இந்த செயல்களின் மூலம் உணவு உற்பத்தி தடையின்றி நடக்கும் என்று கூறுகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli