பூஞ்சையால் நேரடியாக மாசுப்பட்ட மண்ணை சுத்தம் செய்ய முடியாது. ஆனால், பாரம்பரிய உரமாக்கலோடு, இணைந்து இது மண்ணை சுத்தம் செய்கிறது. அதற்காக ஒரு புதிய முறைய பின்லாந்து ஆல்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எண்ணெய் போன்ற கரிம மாசுப்பாட்டால் மண் மாசடைந்து வருகிறது. இதனை உரம் மூலம் சரிசெய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். polyaromatic ஹைட்ரோகார்பன்கள் மற்றும் டையாக்சின்கள் போன்ற கரிம மாசுப்பாடுகளுக்கு எதிராக இது பயன்தரவில்லை. மேலும் தோண்டியெடுக்கப்பட்ட அசுத்தமான மண்ணில் 45% எண்ணெய் வித்துகள் அமைத்துள்ளன. இது போன்ற மண், தொழில்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் தான் காணப்படுகிறது என்று ஆல்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் Erika Winquist கூறுகிறார்.
பின்லாந்தில் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டில் தோண்டிய, கிட்டத்தட்ட 3 மில்லியன் டன் அசுத்தமான மண், கழிவு தளங்கள் மற்றும் பிற சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது என்று Erika Winquist கூறினார்.
Mycelia என்ற பூஞ்சை, மண் மாசடையும் உட்பொருட்களை உடைத்துவிடுகிறது. மண் மாசடைவதை தடுக்க பூஞ்சையை, கலவைகள் கொண்ட பைன் மரப்பட்டையில் வளர்க்கிறார்கள்.இதனுடைய வளர்ச்சி 4 முதல் 6 வாரங்களுக்கு நீடிக்கும். மேலும் இந்த பூஞ்சை, தாவரத்தை நன்றாக சுத்தம் செய்கிறது. mycelia- வின் வெள்ளை அழுகல் பூஞ்சையை, மாசுப்பட்ட மண்ணில் வளர விடுகிறார்கள்.
வெள்ளை அழுகல் பூஞ்சை மரத்தில் இயற்கையாகவே வளரக் கூடிய தன்மை கொண்டது. இந்த பூஞ்சை மண்ணில் வளர வளர மாசுப்பட்ட மண்ணில் உள்ள லிக்னின் போன்ற கட்டமைப்பு மூலக்கூறுகளை உடைக்கிறது. இவ்வாறு நடைபெற்ற பிறகு ஆய்வில் சோதனை செய்து பார்த்த போது, நல்ல முடிவுகள் கிடைத்தது. PAH சேர்மங்கள் 96% மற்றும் டையாக்சின்கள் 64% அனைத்தும் மூன்று மாதங்களில் உடைக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எண்ணை கறைப்பட்ட மண்ணை வளமான மண்ணாக மாற்ற இந்த முறை பயன்படுகிறது என்று ஆல்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் Erika Winquist கூறுகிறார்.
http://www.sciencedaily.com/releases/2014/05/140521094743.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli