Vivasayam | விவசாயம்

வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம்

டினித் ஆதித்யா என்ற மாணவன் 15 வயதிலேயே 17 கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். அதற்காக அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளான். இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை பெறுவதற்காக முயற்சி செய்துள்ளார்.

13

டினித் 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே நிறைய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்துள்ளார். அவர் இப்போது 6 மொழிகளில் 35 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்களை கண்டுபிடித்துள்ளார். மேலும் இவர் சமூக சேவை செய்வதிலும் அதிக ஆர்வம் மிகுந்தவராக இருக்கின்றார்.

நாம் நிறைய பிளாஸ்டிக் தட்டுகளை பயன்படுத்துவதால் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுகிறது. இது போன்ற கழிவுகளை தடுப்பதற்கு கப்ஸ் மற்றும் தட்டுகளை வாழை இலைகளில் செய்ய ஒரு நல்ல யோசனை வந்தது.

வாழை இலைகளில் தயாரிக்கப்படும் கப்ஸ் மற்றும் தட்டுகளில் எந்த ஒரு வேதிப்பொருளும் கலப்பதில்லை அதனால் மக்களுடைய ஆயுட்காலமும் நீடித்திருக்கும். அதுமட்டுமல்லாமல் வெப்பதன்மையும் குறைக்க செய்யும்.

பொதுவாக வாழை இலைகள் மூன்று நாட்களில் காய்ந்து விடும் ஏனென்றால் அதனுடைய செல் சுவர்கள் மிகவும் மென்மையானவை. கப்ஸ் மற்றும் தட்டுகள் செய்வதால் ஒரு வருட காலம் இலைகள் வாடாமல் செல்சுவர்கள் கெட்டியாக இருக்கக்கூடும்.

கப்ஸ் மற்றும் தட்டுகள் தயார் செய்வதற்கு குறைந்த செலவுதான் ஆகிறது. இதனை சிறந்த வழியில் வெளியேற்றப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்காக ஆதித்யா பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

http://www.thebetterindia.com/12011/young-innovator-17-inventions-adithyaa/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

     .

Exit mobile version