Vivasayam | விவசாயம்

3d சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க மென்பொருள்

பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை பற்றி அறிவியலறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நிலத்தடி நீரை எளிதாக கண்டுபிடிக்க தற்போது GMS (Global Management System) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக விரைவாக பூமிக்கு அடியில் உள்ள நீரினை நாம் கண்டுபிடித்துவிடலாம் என்ற அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். இந்த GMS முறையில் 3d காட்சிப்படுத்துதலும் அடங்கி உள்ளது. இதன் உதவி கொண்டு பூமியின் அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்க (புள்ளிகள், வளைவுகள், மற்றும் பலகோணங்கள்) உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த GMS 3d காட்சி மென்பொருள் $1800லிருந்து நமக்கு தற்போது சந்தையில் கிடைக்கிறது என்றும், மிக எளிய வடிவில் தண்ணீர் இருக்கும் இடத்தை துல்லியமாக படம் பிடித்து காட்டும் ஆற்றல் கொண்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2

GMS ஒரு முப்பரிமாண சூழலில் நிலத்தடி தண்ணீரை 3d வடிவில் நமக்கு படம்பிடித்து காட்டும் மென்பொருளை கொண்டுள்ளது. அதில் அடங்கியுள்ள காரணிகள்:-

உண்மையான  3d மாதிரிகள்

மேம்படுத்தப்பட்ட மென்பொருள் ஒழுங்கமைப்பு

யதார்த்தமான புகைப்பட உருவம்

பவர்பாயிண்ட் (அ) வலை விளக்க அனிமேஷன்

மாதிரி படங்களை மூட மற்றும் பிரகாசத்தை கட்டுப்படுத்துதல்

குறிப்பு படங்கள்

புவிசார் நீர் நிலைகளை பற்றி காட்டும் பிரிவுகள் போன்றவைகளாகும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version