Vivasayam | விவசாயம்

தென்னை மர பாதுகாப்பு !

காண்டமிருக வண்டிடமிருந்து தென்னையை பாதுகாப்பது எப்படி?

தென்னை மரத்திற்கு அதிக விளைவுகளை ஏற்படுத்துவது, காண்டமிருக வண்டுகள், சிவப்பு பனை அந்துப்பூச்சி, கருப்பு கேட்டர்பில்லர், வெள்ளைப் புழுவடிவம், போன்றவைகளாகும்

காண்டமிருக வண்டுகளிடமிருந்து தென்னையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:-

பெரும்பாலும் தற்போது தென்னை மரத்தின் குருத்து பகுதிகளில் வண்டுகள் பாதிப்பு அதிகம் இருப்பதால் மரமே அழிந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வண்டு துளையிட்ட பகுதியில் சேவிடால் 8g (Sevidoal) (25g) இதனுடன் நுண் மணல் போன்றவற்றை வண்டு துளையிட்ட பகுதியில் போட்டுவிட வேண்டும். இதனை ஏப்ரல், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செய்தால் இந்த பிரச்சனையில் இருந்து விரைவாக விடுபடலாம்.

மற்றொரு முறையிலும் தென்னை மரத்தை பாதுகாக்கலாம் அவை:-

10.5g இரசக்கற்பூரத்தை, நுண் மணல் துகளுடன் நன்றாக கலந்து, வண்டு துளையிட்ட பகுதியில் போட வேண்டும். இதனை 45 நாட்களுக்கு ஒரு முறையோ (அ) வாரத்திற்கு ஒரு முறையோ பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாது 0.01% கார்பரிழை (50wp) துளைபோட்ட பகுதியில் ஊற்ற வேண்டும்.

இன்னொரு முறை 250 ml Metarrizhium + 750ml தண்ணீர் கொண்டு துளையிட்ட பகுதியில் ஊற்ற வேண்டும்.

இலைகளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கும் இந்த வகை மருந்தினை தெளித்தல் இது தகுந்த பூச்சிகொல்லி மருந்தாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

3

சிவப்பு பனை அந்துப்பூச்சிகளிடமிருந்து தென்னை மரத்தை பாதுகாப்பது எப்படி?

சிவப்பு பனை அந்துப்பூச்சிகள் பாதிப்பு தென்னை மரத்தில் இருந்தால் தென்னை மர குருத்தில் பிசுபிசுப்பு பழுப்பு திரவம் மற்றும் இலைகளின் மூலம் தண்டு துளைகள் அடைந்து மரத்தில் உள்ள நாரினை வெளியேற்றுவதால் மரம் அழிந்து விடும் அபாயம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட 1.1 கார்பரில் (20gm 1 லிட்டர்) தண்ணீர் கலந்து சேதமடைந்த பகுதியில் உள்ள துளைகளில் ஒரு புனல் பயன்படுத்தி ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் தென்னை  மரத்திற்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து விரைவில் விடுபடலாம்.

கருப்பு கம்பளி பூச்சி தாக்குதலிலிருந்து தென்னை இலையினை பாதுகாப்பது எப்படி?

கருப்பு கம்பளி பூச்சியின் பாதிப்பு பெரும்பாலும் மே, ஜனவரி மாதங்களில் ஏற்படுகிறது. இந்த கம்பளி பூச்சி தென்னை மரத்தின் இலைகளில் உள்ள பச்சையத்தை உணவாக உட்கொள்கிறது. இவ்வாறு உட்கொள்வதால் தென்னை மரத்தின் இலைகள் முழுவதும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இந்த பாதிப்பிலிருந்து விடுபட 0.02% Dishlorvos 100 Ec யை தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இலைகளின் மீது தெளித்தால் இந்த பாதிப்பிலிருந்து விரைவாக விடுபடலாம். உயிரியல் ஆய்வின் படி Gorrzus nephantidis, Elasmns nephantidis மற்றும் Bravhimeria nosatoi போன்ற ஒட்டுண்ணிகளை பாதிக்கப்பட்ட இலையின் மீது செலுத்தினால் இவை இலைகளுக்கு தகுந்த பாதுகாப்பினை அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version