கீரின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தினால் வண்ணத்து பூச்சிகள் அனைத்தும் தற்போது சிறிதாகி விட்டன, என்று ஆய்வு செய்து கூறியுள்ளனர். இந்த காலநிலை மாற்றத்தினால் ஆர்டிக் பகுதிகளில் உள்ள வண்ணத்து பூச்சிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது என்று டேனில் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
Aarhus University ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் பகுதியில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் சிறகினை 1996 லிருந்து 2013-வரை ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளின் அளவு வருடத்திற்கு வருடம் குறைந்து வருகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பூமி மிக அதிகமாக வெப்பம் அடைந்து வருவதே ஆகும். பெரும்பாலும் வண்ணத்துப் பூச்சிகளின் வளர்ச்சி குளிர் காலத்தில் தான் மிக அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் இந்த பூச்சிகளின் வளர்ச்சி அதிகமாக பாதிப்பு அடைந்துள்ளது. குறிப்பாக ஆர்டிக் பகுதியில் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli
it is easy to make an butterfly garden the only thing is we should need human heart